Sunday, 15 January 2012

உன் கழுத்தேறிய தாலி..

உன்னை
எனக்குச் சொந்தமாகிய
நிமிடம் முதலே,
என்னைவிட அதிகமாய்
உன்னை சொந்தமாக்கிட
வேண்டுகிறது...

Friday, 13 January 2012

தேவதையொடு நகர்வலம்.

ஒற்றைக் கையில்
வடம் பிடித்து
தேவதையொடு நகர்வலம்.
உன் கரம் பற்றி நடக்கையில்...

காதல்.

உன்னைப் பற்றிய
பிம்பங்களை
எனக்குச் சாதகமாய்
பிரதிபலிக்கும் கண்ணாடி.


எங்கள் ஊடல்

இரைச்சல் மிகுந்த
பகலில் ஊமையாய்,

செவிடாகிப் போன
இரவில்

கட்டில் சப்தங்களாய்
எங்கள் ஊடல்..

கண்ணீர் துளியின் பாரம்

எனது கண்ணீர் துளியின்
பாரம் கண்டிட
புரட்டிப் பாரடி
என் பக்கங்களை...

சுவாசமாய் வாசிக்கப்படும்

படிக்கப்படாது
சுவாசமாய் வாசிக்கப்படும்
கவிதை
உன் பெயர்..

உன் பெயர்..

கவிதைக்கான அடையாளங்கள்
ஏதும் இன்றியும்,
வாசித்தவரால் பாராட்டப்படுகிறது
உன் பெயர்..

சரி பார்த்துக் கொள்கிறது

வெகுவாய் தெரிந்திருந்தும்
அடிக்கடி சொல்லி
சரி பார்த்துக் கொள்கிறது
மனம் - உன் பெயரை..

நிலவும் நீயும்

இரவில்
உயிர் முழித்திருக்க
நிழல் மட்டும் உறங்கும் விந்தை.
நிஜமான நிலவிலும்,
நிழலான உன்னிலும்..

ஒவ்வொரு நொடியும்

தன் கடைசி உயிரின்
நொடி வரையிலும்
புல்லிடம் - தன்
அதீத காதலை வெளிப்படுத்தும்
பனித்துளியாய் - என்
ஒவ்வொரு நொடியும் உன்னோடு...

விருப்பப் பட்டியல்

நீ விரும்பி ரசிக்கும்
ஒவ்வொரு பொருளுமாய்
நானாக மாறிட
வரம் கேட்கிறேன்,
உன் விருப்பப் பட்டியலில்
நானில்லாக் காரணத்தில்...

வெளிச்சத்திற்கு கருமை பூச

பகலின் வெளிச்சத்திற்கு
கருமை பூசி அழிக்கிறேன்.
இரவில் கிடைக்கும்
உன்னுடனான நெருக்கத்திற்காய்..

பாவனை

நீ கதையாக
சொல்லுகையில்,
படமாகிப் போகிறது எனக்கு
உன் பாவனையில்...

உன் பெயர்.

உன்வசம் உள்ள
கவிதை புத்தகத்தில் மட்டும்
முன்னுரைக்கு முன் பக்கத்திலேயே
கவிதை ஆரம்பித்து விடுகிறது.


உளி

களிமண் பொம்மை
செதுக்க உளியாம்,
உன்னை இழந்த எனக்கான
மரணம் போல்...

இன்னும் அதே இளமையோடு

காலம்
என்னைக் கடத்தி
வயோதிகனாய் மாற்றியும்,
இன்னும் அதே
இளமையோடு உன் நினைவு...

வலி

உன் இதழ்கள் சுழற்றிய
வார்த்தை சாட்டைகூட
இவ்வளவு வலி
தரவில்லையடி - உன்
இதழ் பூட்டிய
மௌனத்தைப் போன்று
...

நீ தந்த நினைவிலே

சூரியனின் இரவல் ஒளியிலேயே
இரவின் தனிமையில்
காலம் கடத்தும்
நிலவின் பிரதியாய்,
நீ தந்த நினைவிலே
நானும் வாழ்ந்துவிடுகிறேன்..

வாகன ஓட்டியாய் காற்று

இரவில் நம்மிடையே
நுழைந்து செல்ல,
காத்துக் கிடக்கிறது,
பச்சை விளக்கை
எதிர் பார்த்து காத்திருக்கும்
வாகன ஓட்டியாய்
காற்றும்...

நான்..

இரவு நேர நெருக்கத்தில்
உன் வியர்வையை
ஒற்றி எடுக்கும் கைத்துண்டு
நான்..

சகோதரி..

எந்தன் பெண்பால்.
சகோதரி..

தூங்காத மனம்

அதற்குள் விடிந்ததற்கு
கோபம் கொள்ளும் மனம்
எப்பொழுது விடியும் என்றே
உறங்கப் போகிறது
உனைக் கண்ட நாள் முதல்...

மௌனம் பேசும் காற்று

என் ஏக்கத்தினையும்
வேதனைகளையும்
தன்னில் ஏற்றிக் கொண்டும்
ஏனோ உன்னிடம் சொல்லாமலே
மௌனம் பேசுகிறது காற்று...

Wednesday, 11 January 2012

பெயர் இல்லையே

உனக்குப் பிடித்த
கவிதைகளை எல்லாம்
கோடிட்டு காட்டு என
கவிதை புத்தகம்
ஒன்றினை தந்தாள்..

மறுநாள் பார்க்கையில்
எத்தனை கவிதை கோடிட்டாய்
எனக் கேட்கையில்,
எந்தப் பக்கத்திலும்
உந்தன் பெயர் இல்லையே
எனத் திருப்பிக் கொடுத்தேன்...

நீ

சிரிப்பழகின்
ஒட்டு மொத்த
குத்தகைக்காரிடி நீ..

இடம் இல்லையாம்

வாரத்திற்கு ஒருமுறை
நகம் கடித்து துப்படி.
புதையலை சேர்த்து வைக்க
இடம் இல்லையாம்
எறும்புகளிடம்..

புதையல்

பூமி போர்த்திய புதையலாய்
போர்வை போர்த்திய
நீ
புதையல் எனக்கு..

காத்துக்கிடந்த நிலவும்

விடிந்ததும்
உன் முகம்
கண்ட பின்னே தான்
அடைய செல்கிறது,

உனக்கென இரவு முழுக்க
தனிமையில் காத்துக்கிடந்த
நிலவும்..

ஏற்க மறுக்கிறாள்

அவரவர் பொருள்
அவருக்கே சொந்தமென்ற
எண்ணம் கொண்டவளோ..
என் காதல்
ஏற்க மறுக்கிறாள்...

வேலை கொடுப்போம் இதழ்களுக்கு...

வியர்பதே இல்லையென
பெருமை பேசுகிறது இதழ்கள்.
வாடி அன்பே
வியர்க்கும் வரை
வேலை கொடுப்போம்
நம் இதழ்களுக்கு...

வெட்க ஊற்றின் பிறப்பிடம்

உன் முகத்தில் பாயும்
வெட்க ஊற்றின் பிறப்பிடம்
உனது கன்னக் குழிதான் போலும்...

ஒளியின் வேகமே அதிகமென

ஒளியின் வேகமே அதிகமென
இன்னொரு முறை
நிருபிக்கப்பட்டுள்ளது..

நீ சொல்ல வந்த காதலை
வார்த்தைகள் சொல்வதற்கு முன்னே
கண்கள் சொல்லியதில்...

மல்லுக்கட்டும் மல்லிகை

உன்னுடன் சேர்ந்து
உயிர் விடத் துடிக்கும்
என்னுடன்
மல்லுக்கட்டி நிற்கிறது
உன் தலை சேர்ந்து
உதிரும் மல்லிகையும்..

தரை நோக்கியே நடக்கையில்

என் இதயம்
ஒரு நொடி கூட
தாங்காத உன் பார்வையினை,
எப்படித் தான் தாங்குகிறதோ பூமி
நீ பெண்மையின் நாணத்தில்
தலை குனிந்து
தரை நோக்கியே நடக்கையில்...

பூனை நடை

சப்தமின்றி
ஒய்யாரமாய் நடப்பதை
பூனை நடை என்று
தவறாக சொல்லிவிட்டார்கள்,
உன் நடை காணாத காரணத்தினால்..

முத்தங்களுக்கு முன்னேயான

மழைக்கு முன்னாளான
மண் வாசனை,
என் முத்தங்களுக்கு
முன்னேயான உனது
கன்னச் சிவப்புகள்..

எனக்குள் நீ..

செடிகளும்
புறக்கணித்த பாலையில்
பூத்த ஈச்சையாய்
எனக்குள் நீ..

கண்டு கொண்டேன்...

ரோஜாவிற்கு
இதழ்கள்தாம் உண்டென்று
நம்பி வந்தேன்..
நீ சிரிக்கும் வேளையில் தான்
பற்களும் உண்டென்று
கண்டு கொண்டேன்...

தலை சாய்த்து மலர்கள்

உனது பார்வையின் உஷ்ணத்தில்
பூப்பெய்து பூரித்தபடி
நாணத்தில் தலை சாய்த்து
நிற்கிறது மலர்களும்...

இயக்கும் இறந்த காலம்

உனது
ஒவ்வொரு இறந்த காலத்தின்
அசைவுகளும் தான்
எனது நிகழ்காலத்தினை
இயக்கிக் கொண்டிருக்கிறது...

நிலத்தில் வாழும் மீன்

குளக்கரையில்
தூண்டில் போட்டவரெல்லாம்
திகைத்து நிற்கின்றனர்.
நிலத்தில் வாழும்
மீனா என்று,
குளித்து கரையேறும்
உன்னைப் பார்த்து...

வெறுமென காட்சியளிக்கிறது கோவில்..

கோவிலுக்குள் வந்து
தியானம் செய்யாதே...
நம்மை விட
அழகு சிலை வந்துவிட்டதென
வேறு கோவிலுக்கு
இடம் பெயர்ந்து விட்ட சிலையால்
வெறுமென காட்சியளிக்கிறது
கோவில்..


இல்லாத தைரியம்

என் குறுஞ்செய்திக்கு
இருக்கின்ற தைரியமும்
என் வாய் வார்த்தைகளுக்கு
இல்லையடி - உன்னிடம்
என் காதலை சொல்ல..

வாசகம் வைக்கும் நகங்கள்

பூக்களைப் பறிக்காதே
எனும் வாசகத்திற்கு போட்டியாய்
எங்களைக் கடிக்காதே
எனும் வாசகம் வைக்கிறது
நீ கடித்து துப்பும்
உன் நகங்கள்...

என்னவேன்று கொண்டாட...

பனிரெண்டு வருடங்களுக்கு
ஒருமுறை பூக்கும்
பூவினையே கொண்டாடுகையில்,
என் ஆயுளுக்கும் மொத்தமாய்
ஒன்றென பூக்கும் பூக்கும்
உன்னை என்னவேன்று கொண்டாட...

எப்படி

இந்த மலருக்கு மட்டும்
எப்படி இத்தனை வருடங்கள்
ஆயுளென மருகிக் கேட்கிறது
ரோஜா..

தேன்

தேனிக்களின்
உமிழ் நீர்தான் தேனென்றால்,
நீயும் எனக்கு
தேன் தான்...

சாரல்

இரண்டடி தூரத்தில்
மேகத்தின் சாரல்
உன் தலை துவட்டலில்..