Friday, 16 March, 2012

மாமிசப் பூ மலாய்

என் முன்னால் நின்று
என் கழுத்தில்
உன் இரு கை கோர்த்து தொங்குகையில்
மாமிசப் பூமாலையாய் நீ..

அறிவுரைகள்

அறிவுரைகள் என்றும்
பிடிப்பதில்லை எனக்கு.
ஏனோ பிடிக்கிறது
உன்னுடன் என்னை அணைத்தபடியே
நீ அறிவுரைக்கும் பொழுது
...

சொல்லிட வைத்தாய்

பிடிக்கும்
உணவுகள் எல்லாம்
பிடிக்காதென சொல்லிட வைத்தாய்
பிடிவாதமாய்
நீ ஊட்டிவிடுகையில்...

உன்னைத் தேடும் முடிவுரைகள்

எனது எத்தனையோ கவிதைகள்
அனிச்சையாய் தோன்றினாலும்
ஏனோ முடிவுரைக்கு
உன்னைத் தான் தேடிடுது
...

நூலாய் என் நண்பர்கள்

என் காதல் பார்க்கையில்
அழகிய பட்டமாய்
அனைவருக்கும் தெரிகையில்,
ஏனோ மறைந்து போகிறார்கள்
நூலாய் என் காதலை
தூக்கி நிறுத்திய நண்பர்கள்
...

மறுக்கப்படும் நட்பு

நட்பு கொள்கையில்
பேசப்பட்ட விசயங்களுள் ஒன்றான
எதிர் பாலின நட்புகள் பலவும்
மறுக்கப்படுகிறது
காதலின் எல்கைக்குள் நுழைகையில்
...

சக்தி

மரணம் வெல்லும்
சக்தி வேண்டாம் இறைவா
அவள் மௌனம் தாங்கும்
சக்தி தந்திடு...
.