Monday 24 October, 2011

ஆதிவாசி

நான் மட்டும் அணைக்கும்
உன் உடலை
உடையும் அணைக்க
குமுறும் இதயம்
ஆதிவாசியாய்
பிறப்பெடுக்க வேண்டியவன்
நான்...

மழை சாரல்

மழையில் நனைதலை விட
மழையின் சாரலில்
அதிகம் இன்பம் காணும்
இதயங்கள் சிலர்.
காதலின் நிஜங்களை விட
நினைவுகளில் இன்பம் காணும்
என்னைப் போல்...

சிதறடிக்கும் உன் நினைவு

பெருமழையில்
ஜன்னலின் தாழ்வார இடுக்கில்
நிரம்பி ஆர்ப்பரித்து விழுந்து,
வடிந்த பின்
சொட்டிக் கொண்டிருக்கும் துளியில்
என் கவனம்
சிதறடிக்கிறது உன் நினைவு...

மழையும் கண்ணீரும்

விழும் மழைத்துளியை போலவே
சுத்தமானது தான்
அரிதான ஆண்களின் கண்ணீர்.
ஏனோ இரண்டுமே மதிப்பின்றி
வீணாக்கப்படுகிறது...

குடைக்குள் மழை

குடை பிடித்து பயணிக்கையில்
மழையில் நனைகிறேன்,
எதிரில் நனைந்து விளையாடும்
குழந்தையாய்ப் பார்த்து
மனதில்...

முதியோர் இல்லம்

ஊர்கூடி வாழ்ந்த
ஆலமரமாய்
தனித்து நிற்கிறார்கள்
குடும்பத்து மூத்தர்வர்கள்
முதியோர் இல்லத்தில்....

இரசிகர் யாரேனும் கூறுங்களேன்..

எங்கேயடி அவள்.
என்னோடு நிழலாய் மடியோடு.
மழலையாய் காதலோடு
வாழ்ந்த அவள் எங்கே.

வாழ்க்கையின்
பெரும்பாலான தேடல்கள்
அவளை கண்டிடவே...

ஓரிடம் விழுந்த பொருளை
ஓரிடம் தேடலாம்.
என்னைப் போல் அல்லாடி
உலவிக்கொண்டிருக்கும்
அவளை எப்படி தேட...

தூரத்தில் திருமண
ஊர்வலத்தின் நாயகியோ.

எனக்கடுத்த திருப்பத்தில்
வளைந்தவள் பெண்ணொருத்தியோ..

முன்னோக்கி செல்லும் பேருந்தில்
என் நினைவுப் பாரம் தாளாமல்
கணவன் தோள் சாய்ந்தவளோ..

நான் கொட்டிச் சென்ற விபுதியில்
நெற்றி நனைத்தவளோ..

அவள் வரும் பாதையில்
நான் காத்திருக்கும் நேரம்
நான் வரும் வழியில்
எனக்காய் காத்திருப்பாளோ..

ஒரு திசையில் இரசிக்கும்
வானவில்லின் மறுபக்கம்
அவள் ரசித்திருப்பாளோ..

கூட்டத்தின் நெரிசலினூடே
என் மூச்சோடு தன் மூச்சு
கலந்திருப்பாளோ...

பிடித்த திரைப்படம் பார்க்கையில்
என்னைப் போல் கண்ணீரில்
காதல் நினைவுகள் அமிழ்த்திருப்பளோ..

எனக்குப் பிடித்த
ஊதா நிறச் சட்டையினை
எடுத்தபின் வெருப்பில்
புறம் தள்ளியிருப்பாளோ...

நமக்கு பிடித்த பாடலை
அவள் குரலில் கேட்கும்
என்னைப் பொல்
அவளும் என் குரலில் கேட்டிருப்ப
ளோ..

யார் பதில் சொல்வது..
திரைப்பட காட்சியினைப் போல்
பார்த்த இரசிகர் யாரேனும்
கூறுங்களேன்..

தினமும் விடியும் வாழ்க்கை

இறந்து போன
காலம் எனத் தெரிந்தும்
உயிரூட்ட முயற்சிக்கும் மனம்...

காற்றில்
கரைந்து போன சொற்றொடரில்
புதிதாய் இணைய
துடிக்கும் வார்த்தை...

துளி விஷத்தோடு
சேர்ந்த பின் தன்
தன்மை எண்ணும் பாலாய்...

தன் கடைசி நொடிகளை கண்டு
வேறு இடம் தேடும்
மரக்கிளை இலைகள்...

உன்னோடு சேர்ந்த பின்
பிரித்தெடுக்க நினைக்கும்
எனது நினைவுகள்...

தவறி எழுதப்பட்ட பிழையாய்
உனது வருகை நோக்கி
தினமும் விடிந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை சூரியன்...

வருங்கால மனைவிக்கு

என் செயலில் உன் வார்த்தை.
உன் செயலில் என் வார்த்தை.

தலையணைகளுக்கு பெரும்பாலும் விடுமுறை.

கண்ணீர் பார்க்கும் வாய்ப்பு

உன் அடங்கா சந்தோசச் சிரிப்பில்.

நாட்காட்டி கிழிக்கையில்

அதற்குள் முடிந்ததாய் ஏக்கம்.

உனக்கும் எனக்கும்

முதல் குழந்தையாய் நாம்.

பெரும்பாலும் பிரிவென்பது உடலில் மட்டும்.


உன் நினைவுகள் யாவும்

என் கரம் பற்றும் கைரேகையாய்...

பசியார உன் புன்னகையும்

தாகம் தணிக்க முத்தங்களும்.

தனிமைகள் சாபமாய்

உடனிருப்புகள் சாகாவரமாய்.

பாசம் அடைக்கப்படா கடனாய்.

காதம் மட்டும் ஒரே சொத்தாய்.

இரவில் என் போர்வையாய் நீ.

பகலில் உன் சேலையாய் நான்.

ஒரு நொடி கோபத்திற்கு

ஒரு மணி நேர முத்தம்.

ஒரு நிமிட மௌனத்திற்கு
ஒரு நாள் கொஞ்சல்.

காமத்துப் பாலில் எழுதப்படா
குறளாய் நீயும் நானும்..

மொத்தத்தில் பகலில் தோழமையும்
இரவில் காதலியுமாய்
வாழ்க்கை கழிய வேண்டும்...

Saturday 22 October, 2011

சுற்றும் பூமி

சூரியனை சுற்றிடும்
பூமிக்கும் அச்சம்..
எங்கே நம்மைவிட
அதிகம் சுற்றியவனென
பெயர் எடுத்துவிடுவானோ என்று,
உன்னைச் சுற்றிடுதலைப் பார்த்து...

துடிக்கும் இதயம்

இடைவெளியற்ற நெருக்கத்தில்
தனிக்குடித்தனம் இருந்தது போய்,
ஒரு சேரத் துடிக்கும் இதயம்
ஒன்றிணைந்து...

கைக்கு எட்டியது

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாத நிலையில்
நான் இன்று...

என் விரல்களுக்கு
கிடைத்த உன்னிதழ்கள்
என்னிதழ்களுக்கு
எட்டாததில்...

தனிமை இரவு

தனிமை இரவில்
நான் நடக்க
உடன் வருகிறாய் நிழலாக
நமக்கு பிடித்த
நிலவொளியில்...