Thursday, 6 October 2011

தடம் மாறிப் பயணிக்கும் வாழ்க்கை


எத்தனையோ பெண்கள்
கடந்து செல்ல,
ஒவ்வொரு முகமாய்
உன் சாயல் தேடுகிறேன்...

உன்னைக் காணா நேரம்
உன் நகலிலாவது கண்டிட...

நீ பார்த்து ரசித்த
ஒவ்வொரு இடங்களிலும்
நானும் ஒரு பொருளாய்
நின்று பார்க்கிறேன்...

நீ ரசித்த இடத்தில்
என்னையும் ஒரு காட்சியாய்
நீ ரசித்ததாய் எண்ணி...

நீ இருக்கும்
திசை நோக்கியே
எனது பெரும்பாலான
பார்வைகளும்
தலை சாயதல்களும் உள்ளது...

உனக்கடுத்த
இடத்தினில் நின்றபடியே
உன் மூச்சுக் காற்று
சிறை பிடித்து
நெஞ்சுக் கூட்டில் அடைக்கிறேன்...

என்னைப் பார்த்து
தினசரி நாட்காட்டியும்
எள்ளி நகையாட,
இரவுகளோ என்னை
சித்திரவதை செய்திட
சிரித்தபடியே தயாராக...

நாட்கள் ஓடுவது புலப்பட,
உன் கண்ணின் பார்வை மொழிக்கு
அர்த்தம் புரிந்திடாமல்
சேருமிடம் தெரியாது
தடம் மாறியே பயணிக்கிறது
வாழ்க்கை...

No comments:

Post a Comment