Friday, 7 October 2011

விதியின் நாளைக் கண்டு...


சற்றே பலமான காற்றிலே
தனது உயிரின் கோர்ப்பினை
மெல்ல விடுவித்த படி
வயோதிக இலைகள்...

விழுவோமா வேண்டாமா என
தற்கொலை முடிவில்,
ஒத்தையா இரட்டையா
போட்டுப் பார்க்கிறது
மழை...

ஈரப்பதம் கொண்டு
சுற்றிடும் காற்றும்
என்னில் மோதிடுகையில்
குளிர் எட்டாது மூளை
செயலற்று நிற்கிறது...

இடி மின்னல் துணையின்றி
எட்டிப் பார்க்கும் முனைப்பில்
கண்ணீர்...

விளக்கமற்ற கேள்வியோடு
தனித்து நிற்கையில்
சற்றே குறைய
தோல்வியினை ஏற்கும் வேளையில்
உடைந்து எட்டிப் பார்க்கிறது
மழையோடு கண்ணீரும்...

நீண்டதொரு பூகம்பத்திற்கு
அடையாளங்கள் மெல்ல
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
என் இதய உருண்டைக்குள்...

உன் காதல் அறுத்தெறிய
தயாராயிருக்கும்
விதியின் நாளைக் கண்டு...

No comments:

Post a Comment