
நீண்டதொரு இரவின்
தனிமைப் பெருங்கடலில்,
சிறு துளையோடு
ஓடத்தில் பயணம்...
துடுப்பற்ற ஓடத்தின்
பயண திசையை தீர்மானிக்க
காற்றும் அலையும்...
என் வாழ்க்கை ஓடமும்
அதில் விதிவிலக்கல்ல...
உன் பார்வைகளும்
நினைவுகளும் ஒட்டிடும்
என் நாட்கள் போல்...
நிலவின் மங்கிய வெளிச்சமே
கலங்கரை விளக்காய்,
திசை காட்டியாய்
உன் பார்வைகளில்...
அடை மழை பார்வையில்
விடாது காற்றின் நினைவில்
தத்தளிக்கிறது இதய ஓடம்...
தனிமைத் தீவு ஏதேனும்
தென்படாதா என்றே
மெல்ல விடிகிறது...
தூரத்தில் பகல் தீவு
கண்ணில் சொர்க்கமாய் தெரிய
சீக்கரம் சென்றிட
வேகமாய் துடிக்கிறது...
நீந்திக் கரையேறுகிறது
என்னிதயம் உன் நினைவில்...
வேலைகளுக்கு நடுவில்
உன் நினைவுகள் ஓய்வெடுக்க..
ஆடிய கால் என்றும்
ஓய்ந்தது இல்லை...
வெறுமெனே வாழ்வில்
அதிகம் ஈர்ப்பில்லை...
மீண்டும் தேடுகிறது இரவினை
அந்த ரணமான இம்சைக்கு...
No comments:
Post a Comment