உனக்கும்உந்தன் நினைவுகளுக்கும்
மிகவும் பிடித்தது - என்
தனிமை தான் போலும்..
இறுக்கமான அணைப்புகளும்,
மூச்சிரைக்கும் முத்தங்களும்
என்னைக் கொஞ்சிக் கொண்டே
காதலிக்கும் உனக்குப் போட்டியாய்,
இதயத்தை காதலால் சுற்றி
மூச்சுவிட மறக்கடித்து
உன் நினைவுச் சுழலில்
தத்தளிக்க வைத்திடும்
உன் நினைவும்...
No comments:
Post a Comment