உன்னை வெறுத்து தடுக்கும்மனிதரை நனைக்க நினைக்கிறாய்...
உன்னையே எண்ணி
உனக்காய் காத்திருக்கும் என்னையேன்
நினைக்க மறுக்கிறாய்...
எனக்கு மட்டும் சொந்தமான
உன்னை என்னைக் கொண்டு
தடுக்கும் உள்ளங்களுக்கு நன்றி...
இப்படிக்கு
உன் அணைப்பில் நனைய
ஏங்கும் காதலி
குடை...
No comments:
Post a Comment