வெற்றுத் தாளின்
வெள்ளைக் காகிதத்தில்
சிதறிய கண்ணீர்த் துளியாய்
கவிதைகள்.
நீயற்ற
என் தனிமைக் காதலில்...
Tuesday, 3 January 2012
அடங்கிக் கிடக்கிறது என் காதல்.
நான் பிடித்த
உன் கைகளின் பிடிக்குள்
தானாகவே
அடங்கிக் கிடக்கிறது
என் காதல்...
உன் கைகளின் பிடிக்குள்
தானாகவே
அடங்கிக் கிடக்கிறது
என் காதல்...
தாமரைக் குளத்தின் ஏக்கம்..
நனைத்திட முடியாதாவென
தாமரைக் குளத் தண்ணீரின்
இத்தனை வருட ஏக்கம்
இன்று தீர்ந்ததடி,
நீ குளிக்கையில்...
தாமரைக் குளத் தண்ணீரின்
இத்தனை வருட ஏக்கம்
இன்று தீர்ந்ததடி,
நீ குளிக்கையில்...
உண்மை என்னடி
சிற்றெறும்பு கடித்து
கத்திய நீ,
உருவத்தில் பெரிய
கட்டெறும்பு நான்
கடிக்கையில் மட்டும்
மௌனம் காத்ததில்
உண்மை என்னடி...
கத்திய நீ,
உருவத்தில் பெரிய
கட்டெறும்பு நான்
கடிக்கையில் மட்டும்
மௌனம் காத்ததில்
உண்மை என்னடி...
வரிசையில் நிற்கும் வார்த்தைகள்
உன்னுடன்
ஒப்பிட்டுக் கூற
முண்டியடித்துக் கொண்டு
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்..
ஒப்பிட்டுக் கூற
முண்டியடித்துக் கொண்டு
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்..
உன் பயம்
நாயென்றால் உனக்கு
பயமென்று தெரிந்தும்
அதிகமாய் நாயிருக்கும் தெருக்களிலே
கூட்டிச் செல்கிறேன்.
உன் பயத்தினில்
நான் பெறும்
இறுக்கத்திற்கும்
நெருக்கத்திற்கும்...
பயமென்று தெரிந்தும்
அதிகமாய் நாயிருக்கும் தெருக்களிலே
கூட்டிச் செல்கிறேன்.
உன் பயத்தினில்
நான் பெறும்
இறுக்கத்திற்கும்
நெருக்கத்திற்கும்...
Monday, 2 January 2012
காமமில்லாக் காதல்
பால் மாறிப் பூக்கும்
நட்பினைப் பார்த்து
காதலா? எனக் கேட்டால்
சற்று திமிராகவே
ஆமோதித்து கூறிடுங்கள்.
ஆம் காமமில்லாக் காதல் என்று...
நட்பினைப் பார்த்து
காதலா? எனக் கேட்டால்
சற்று திமிராகவே
ஆமோதித்து கூறிடுங்கள்.
ஆம் காமமில்லாக் காதல் என்று...
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
என்னடா என்மீது
கோபமே படமாட்டேன்கிறாய்
என்றவாறே தோளில்
கை போட்டு நெருங்கி அமர்ந்தாள்...
இப்படி ஒரு அணைப்பு
கோபத்தில் கிடைக்காதே என்றேன்
அவளைப் பார்த்து கண்ணடித்தபடியே...
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
என்றவாறே இதழ்களை
நெருக்கி அணைத்தாள்...
கோபமே படமாட்டேன்கிறாய்
என்றவாறே தோளில்
கை போட்டு நெருங்கி அமர்ந்தாள்...
இப்படி ஒரு அணைப்பு
கோபத்தில் கிடைக்காதே என்றேன்
அவளைப் பார்த்து கண்ணடித்தபடியே...
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
என்றவாறே இதழ்களை
நெருக்கி அணைத்தாள்...
நானெங்கு கூறிட
பக்கத்து வீட்டு
குழந்தையின் சேட்டைகளை
அதே முகபாவத்தோடு
நீ சொல்கையில்,
சொக்கித் தானடி போனேன்
உனது அழகில்...
என் குழந்தை
நீ செய்திடும் சேட்டைகளை
நானெங்கு கூறிட...
குழந்தையின் சேட்டைகளை
அதே முகபாவத்தோடு
நீ சொல்கையில்,
சொக்கித் தானடி போனேன்
உனது அழகில்...
என் குழந்தை
நீ செய்திடும் சேட்டைகளை
நானெங்கு கூறிட...
சக்கரைக் கட்டி
உன்னை
இத்தனை நாட்கள்
எப்படியடி விட்டு வைத்திருந்தது
எறும்புகள் .
இப்படிஒரு சக்கரைக் கட்டியினை...
இத்தனை நாட்கள்
எப்படியடி விட்டு வைத்திருந்தது
எறும்புகள் .
இப்படிஒரு சக்கரைக் கட்டியினை...
எதுவும் செய்திடும் என்னிடமே
அவ்வளவு
பெருமையாகச் சொல்கிறாள்,
அவள் சொன்னதை எல்லாம்
கேட்கும் அவளது கிளி பற்றி.
அவளுக்காய் எதுவும்
செய்திடும் என்னிடமே...
பெருமையாகச் சொல்கிறாள்,
அவள் சொன்னதை எல்லாம்
கேட்கும் அவளது கிளி பற்றி.
அவளுக்காய் எதுவும்
செய்திடும் என்னிடமே...
மரித்தே பிறப்பெடுக்கிறது
சுகப் பிரசவமாக்கிட தான்
ஆசை எனக்கும்,
ஏனோ உன் பிரிவில்
மரித்தே பிறப்பெடுக்கிறது
எனது வரிகளும்...
ஆசை எனக்கும்,
ஏனோ உன் பிரிவில்
மரித்தே பிறப்பெடுக்கிறது
எனது வரிகளும்...
தனிமையில் பிரசவிக்கிறது
உன் கயல்விழியின் பார்வைக்கு
கர்ப்பம் தரித்து
எனது தனிமையில்
பிரசவிக்கிறது கவிதையாய்
எனது பேனா...
கர்ப்பம் தரித்து
எனது தனிமையில்
பிரசவிக்கிறது கவிதையாய்
எனது பேனா...
காத்திருக்கும் வார்த்தைகள்
நீண்ட வரிசையில் நின்று
தரிசிக்கும் பக்தனாய்
உன்னை வருணிக்க
காத்திருக்கும் வார்த்தைகள்...
தரிசிக்கும் பக்தனாய்
உன்னை வருணிக்க
காத்திருக்கும் வார்த்தைகள்...
பிரிந்திட வேண்டும்
பிடிமானம் விட்டு
உதிரும் இலையாய்,
வலியின்றி
பிரிந்திட வேண்டும்
என் உயிரும்
அவள் நினைவுடனே...
உதிரும் இலையாய்,
வலியின்றி
பிரிந்திட வேண்டும்
என் உயிரும்
அவள் நினைவுடனே...
Thursday, 29 December 2011
உருமாறத் துடிக்கிறது
என்னை வைத்துக் கொண்டு
அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே...
உருமாறத் துடிக்கிறது
இதயம்...
அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே...
உருமாறத் துடிக்கிறது
இதயம்...
நொறுங்கிப் போனது
உன்னைப் பார்க்காது
நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களும்
நொறுங்கிப் போனது
உன்னைப் பிரிந்த
இத்தனை நாளில்...
நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களும்
நொறுங்கிப் போனது
உன்னைப் பிரிந்த
இத்தனை நாளில்...
கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...
ராசிப் பலனில்
உனக்கான மகிழ்ச்சிகளைப் பார்த்து
மனம் ஆறுகிறேன்.
உன் நலம் பற்றி
கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...
உனக்கான மகிழ்ச்சிகளைப் பார்த்து
மனம் ஆறுகிறேன்.
உன் நலம் பற்றி
கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...
திணறுகிறது மனம்...
நான் பார்க்கையில்
குழந்தையோடு நிறகாதே
அடிக்கடி...
யாரைக் கொஞ்சுவதென்று
திணறுகிறது மனம்...
குழந்தையோடு நிறகாதே
அடிக்கடி...
யாரைக் கொஞ்சுவதென்று
திணறுகிறது மனம்...
விடுமுறைப் பலகை
சந்தோஷங்களை
மொத்தமாய் குத்தகைக்கு
எடுத்திருந்த விடியலுக்கு முன்னால்,
இப்பொழுது எல்லாம்
விடுமுறைப் பலகை மட்டுமே
தொங்கவிட்டுச் செல்கிறது
உனது பிரிவு...
மொத்தமாய் குத்தகைக்கு
எடுத்திருந்த விடியலுக்கு முன்னால்,
இப்பொழுது எல்லாம்
விடுமுறைப் பலகை மட்டுமே
தொங்கவிட்டுச் செல்கிறது
உனது பிரிவு...
காதல் வேண்டும்...
இப்படி சண்டை
போட்டிடத்தான் காதலித்து
திருமணம் செய்தோமா
என்றென்னும் உள்ளங்களுக்கு
நடுவிலே,
இத்தனை நாட்களாய்
திருமணம் செய்துகொள்ளத்
தவறிவிட்டோமென தவிக்கும்
காதல் வேண்டும்...
போட்டிடத்தான் காதலித்து
திருமணம் செய்தோமா
என்றென்னும் உள்ளங்களுக்கு
நடுவிலே,
இத்தனை நாட்களாய்
திருமணம் செய்துகொள்ளத்
தவறிவிட்டோமென தவிக்கும்
காதல் வேண்டும்...
முத்தத்தின் விடியல் வரை...
உனது வெட்கத்தின் எல்லைகள்
நெடுவானமாய்
நீண்டுகொண்டே இருக்கிறது
எனது முத்தத்தின்
விடியல் வரை...
நெடுவானமாய்
நீண்டுகொண்டே இருக்கிறது
எனது முத்தத்தின்
விடியல் வரை...
கணவரோடு நீ வருகையில்...
உன்னைப் பார்த்திட
நாள் வாராதா என
சுற்றித் திரிந்த
நாட்கள் எத்தனையோ...
பல நாட்களுக்குப் பின்
இன்றுன்னைக் கண்டும்
காணாதவனாய் கடந்து செல்கிறேன்
கணவரோடு நீ வருகையில்...
நாள் வாராதா என
சுற்றித் திரிந்த
நாட்கள் எத்தனையோ...
பல நாட்களுக்குப் பின்
இன்றுன்னைக் கண்டும்
காணாதவனாய் கடந்து செல்கிறேன்
கணவரோடு நீ வருகையில்...
திருநீறு
தெய்வத்திடம் வைத்து
தந்த திருநீறு இல்லை இவை,
என் தேவதை
இட்டுக் கொண்டு
மீதம் விட்டுச் சென்றது
என் நெற்றியில்...
தந்த திருநீறு இல்லை இவை,
என் தேவதை
இட்டுக் கொண்டு
மீதம் விட்டுச் சென்றது
என் நெற்றியில்...
கண்டுகொண்டேனடி
நான் பருவமடந்ததை
கண்டு கொண்டேனடி,
எத்தனையோ பெண்கள்
பார்த்து வராத காதல்
உன்னைப் பார்த்த மட்டிலும்
வந்த பொழுது...
கண்டு கொண்டேனடி,
எத்தனையோ பெண்கள்
பார்த்து வராத காதல்
உன்னைப் பார்த்த மட்டிலும்
வந்த பொழுது...
வான் நோக்கியே இருப்பது
நீ வீதியில் இறங்கி
நடக்கையில் மட்டும்
ஊரார் பார்வை
மொய்த்துவிடுகிறது- ஆமாம்
எத்தனை நாட்கள் தான்
நிலவினை பார்க்க
வான் நோக்கியே இருப்பது..
நடக்கையில் மட்டும்
ஊரார் பார்வை
மொய்த்துவிடுகிறது- ஆமாம்
எத்தனை நாட்கள் தான்
நிலவினை பார்க்க
வான் நோக்கியே இருப்பது..
புரண்டுக் கொண்டிருக்கிறது எந்தன் பக்கங்கள்...
நம் காதலைப் பற்றி
எழுதிட ஆரம்பிக்கையில்
ஆர்வத்துடன் துள்ளி நடையிட்டு
அணிவகுத்த வார்த்தைகள்,
கவிதையின் நீளம் கண்டு
மலைப்பில் சோர்ந்து,
ஓய்வெடுக்கச் சென்றதில்
வெள்ளைப் பக்கங்களாய்
புரண்டுக் கொண்டிருக்கிறது
எந்தன் பக்கங்கள்...
எழுதிட ஆரம்பிக்கையில்
ஆர்வத்துடன் துள்ளி நடையிட்டு
அணிவகுத்த வார்த்தைகள்,
கவிதையின் நீளம் கண்டு
மலைப்பில் சோர்ந்து,
ஓய்வெடுக்கச் சென்றதில்
வெள்ளைப் பக்கங்களாய்
புரண்டுக் கொண்டிருக்கிறது
எந்தன் பக்கங்கள்...
அணிலாகிறேன்...
உன் மேல் படர்ந்த
என் முதுகில்
உனது விரல் நகல்கள்
கீறீ கோடிடுகையில்,
உனைக் கடித்துண்ணும்
அணிலாகிறேன்...
என் முதுகில்
உனது விரல் நகல்கள்
கீறீ கோடிடுகையில்,
உனைக் கடித்துண்ணும்
அணிலாகிறேன்...
வாசித்த மயக்கத்தில்
வாசித்த மயக்கத்தில்
இடம் மாறிக் கிடக்கிறது
வார்த்தைகள் அர்த்தமற்று,
நீ படித்த புத்தகத்தில்...
இடம் மாறிக் கிடக்கிறது
வார்த்தைகள் அர்த்தமற்று,
நீ படித்த புத்தகத்தில்...
Wednesday, 28 December 2011
Monday, 5 December 2011
வந்திட ஏங்கும்
பட்டப் பகல் வேளையில்
கையில் மெழுகு கொண்டு
தேடிடும் பொருளாய்,
திரும்பி வந்திட ஏங்கும்
நப்பாசைக் காதல்...
கையில் மெழுகு கொண்டு
தேடிடும் பொருளாய்,
திரும்பி வந்திட ஏங்கும்
நப்பாசைக் காதல்...
படுக்கையின் புலம்பல்
எந்தன் படுக்கையும்
புலம்பித் தவிக்கிறது,
உறக்கமற்ற இரவுகளின்
புரளாதஒரு நாள்
வராதா என...
புலம்பித் தவிக்கிறது,
உறக்கமற்ற இரவுகளின்
புரளாதஒரு நாள்
வராதா என...
என் தூங்காத உறவுகள்
நிலவிற்கும்
இப்பொழுதெல்லாம் சந்தோசம்,
அதன் துணைக்கு நிற்கிறதாம்
எனது தூங்காத
இரவுகள்...
இப்பொழுதெல்லாம் சந்தோசம்,
அதன் துணைக்கு நிற்கிறதாம்
எனது தூங்காத
இரவுகள்...
எப்படிச் சொல்வது
அசையாமல்
ஒரே இடத்தினில்
படுத்திருக்கும் காரணத்தால்,
ஓயாது உன்
நினைவுகளின் பின்னே
அலைந்து கொண்டிருக்கும்,
எனது இதயத்தை
எப்படிச் சொல்வது
முழுச் சோம்பேறி என...
ஒரே இடத்தினில்
படுத்திருக்கும் காரணத்தால்,
ஓயாது உன்
நினைவுகளின் பின்னே
அலைந்து கொண்டிருக்கும்,
எனது இதயத்தை
எப்படிச் சொல்வது
முழுச் சோம்பேறி என...
நம்ப மறுக்கிறது இதயம்
வாழ்க்கை அடைத்த பலூனை
பிரிவென்னும் ஊசி கொண்டு
துளையிட்டு மெல்ல
உயிரினை வழியவிட்டத்தை
கண் பார்த்தாலும்,
நீ எனநம்ப மறுக்கிறது
இதயம்..
பிரிவென்னும் ஊசி கொண்டு
துளையிட்டு மெல்ல
உயிரினை வழியவிட்டத்தை
கண் பார்த்தாலும்,
நீ எனநம்ப மறுக்கிறது
இதயம்..
Saturday, 3 December 2011
முட்களில் பூக்கும் ரோஜா
எல்லா முட்களிலும்
ரோஜாக்கள் பூப்பதாய்
ஏமாறும் இதயம்,
இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது
உனது காதல்
எனக்கு மட்டுமே என...
ரோஜாக்கள் பூப்பதாய்
ஏமாறும் இதயம்,
இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது
உனது காதல்
எனக்கு மட்டுமே என...
காதல் தவறவிட்ட என் வாழ்க்கை...
உடைந்து போன
கண்ணாடிச் சிதறல்களில்
ஒற்றை உருவம் காணத்தான்
அழுது தொலைக்கிறது
உன் காதல் தவறவிட்ட
என் வாழ்க்கை...
கண்ணாடிச் சிதறல்களில்
ஒற்றை உருவம் காணத்தான்
அழுது தொலைக்கிறது
உன் காதல் தவறவிட்ட
என் வாழ்க்கை...
Friday, 2 December 2011
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
நல்ல மாட்டிற்கு
ஒரு சூடு என்பார்கள்..
இங்கோ சுடுபடுவதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது
ஒரு நல்ல மாடும்
உன் வருகை பார்த்து
நிற்கும் நானும்...
ஒரு சூடு என்பார்கள்..
இங்கோ சுடுபடுவதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது
ஒரு நல்ல மாடும்
உன் வருகை பார்த்து
நிற்கும் நானும்...
Friday, 25 November 2011
மரத்துப் போன தமிழனாய் நாம்
எங்கே போய் தேடுவது.
யாரை கண்டுபிடிக்கச் சொல்வது.
சுண்ணம் பூசி அழிக்கப்பட்ட அடையாளங்களை.
இரையும் காகங்களுக்கும்
அன்னமிட்டவர்கள் இன்று
பசியில் இரையும் வயிற்றுக்கு
உணவிட மனமில்லை...
ஊர் முழுதும் தெரிந்து வைத்திருந்த
அறிமுக எல்லைகள் ஏனோ
அடுத்த வீட்டினை கூட
எட்டிடாது சுருங்கிப் போனது...
விலங்கும் அடிபடுகையில்
துடித்து வலித்த மனம்,
சக மனிதன் துடிக்கையில்
நடந்தது அறியாது
கடந்து செல்கிறது...
பழமைகள் தூக்கி எறியும் பழக்கத்திலே
பெரும்பாலான வீடுகளில்
புறக்கணித்து எறியப்படுகிறார்கள்
வயதில் பழைய முதியோர்களும்...
மனம் கொண்டு வாழந்த
சந்தோஷங்களை யாவும்
பணத்திற்கு அடகு வைத்து
தனிக்குடித்தனம் வாழ்கிறார்கள்
தனி மரம் தோப்பாகாதாவென தெரிந்தும்...
அநியாயங்கள் நடப்பது
அடுத்த தேசத்திலாகவும்,
ஜன்னல் பார்வைகளே உலகம்,
குடும்பமே சுற்றம் என
சுருங்கிப் போனது வாழ்க்கை.
விருந்தோம்பல், களிவிரக்கம்
சிநேகம், பணிவு
மரியாதை, ரெத்திரம் என
பொங்கிக் தழைத்த மறத்தமிழனை இன்று
அருங்காட்சியகத்திலும் புத்தகத்திலும்
காணும் அவலத்தில்
மரத்துப் போன தமிழனாய் நாம்...
யாரை கண்டுபிடிக்கச் சொல்வது.
சுண்ணம் பூசி அழிக்கப்பட்ட அடையாளங்களை.
இரையும் காகங்களுக்கும்
அன்னமிட்டவர்கள் இன்று
பசியில் இரையும் வயிற்றுக்கு
உணவிட மனமில்லை...
ஊர் முழுதும் தெரிந்து வைத்திருந்த
அறிமுக எல்லைகள் ஏனோ
அடுத்த வீட்டினை கூட
எட்டிடாது சுருங்கிப் போனது...
விலங்கும் அடிபடுகையில்
துடித்து வலித்த மனம்,
சக மனிதன் துடிக்கையில்
நடந்தது அறியாது
கடந்து செல்கிறது...
பழமைகள் தூக்கி எறியும் பழக்கத்திலே
பெரும்பாலான வீடுகளில்
புறக்கணித்து எறியப்படுகிறார்கள்
வயதில் பழைய முதியோர்களும்...
மனம் கொண்டு வாழந்த
சந்தோஷங்களை யாவும்
பணத்திற்கு அடகு வைத்து
தனிக்குடித்தனம் வாழ்கிறார்கள்
தனி மரம் தோப்பாகாதாவென தெரிந்தும்...
அநியாயங்கள் நடப்பது
அடுத்த தேசத்திலாகவும்,
ஜன்னல் பார்வைகளே உலகம்,
குடும்பமே சுற்றம் என
சுருங்கிப் போனது வாழ்க்கை.
விருந்தோம்பல், களிவிரக்கம்
சிநேகம், பணிவு
மரியாதை, ரெத்திரம் என
பொங்கிக் தழைத்த மறத்தமிழனை இன்று
அருங்காட்சியகத்திலும் புத்தகத்திலும்
காணும் அவலத்தில்
மரத்துப் போன தமிழனாய் நாம்...
Subscribe to:
Posts (Atom)