Saturday, 30 April 2011

காதல் சொல்ல வந்தேன்

வெகுநாள் இதயம் துளிர்விட்டு
என்னுள் பூத்த காதல்
உரியவர் கை சேர காத்திருப்பு...

இதயம் பேசுவதெல்லாம் ஒருபொழுதும்
இதழ்கள் பேசுவதில்லையே..
நான் மட்டும் என்ன விதிவிலக்கா..

மெல்ல தலை தூக்கிப் பார்க்கும்
காதலை வெளியே எடுத்துப் போட
அவ்வளவு சீக்கரம் தைரியமில்லை...

வழக்கமாய் நீ வரும் வழியில்
மரமோடு மரமாய்
இலையாடிக் கொண்டிருக்கும் மனதோடு
கையில் உனக்கான காதல் வாழ்த்தோடு...

வழக்கமாய் வரும் நேரமும்
கடந்து போன காட்சியாய்,
கடந்திடும் ஒவ்வொரு நொடியும்
இதயம் உயிர் போய் வருகிறது...

நீ
வரும் வழி நோக்கி
வழிந்தோடும் என்னுயிர் தேக்கி
இமைகள் மூடும் முன்
விழியில் உன் உருவம் காட்டு...

No comments:

Post a Comment