யாருமற்ற தனிமையில்நீயும் நானும்...
உன் இரகசியப் பார்வையில்
நம் நெருக்கம் குறைய,
நம்மைச் சுற்றியும்
ஒரு வெப்ப வளையம்
நமது உஷ்ண மூச்சில்..
உன் வெட்கம்
என்னைக் கொத்தி தின்ன,
என் ஆண்மை
நாணிக் குறுகிக் கொள்ள...
உனது குறுகுறு
காதல் பார்வையில்,
தனிமையின் வெப்பத்தில்
என் வெட்கம் யாவும்
வியர்வையாய் வெளியேற...
காது மடல் கடித்து
என் காதோரம்
உன் மூச்சுக் காற்று
இரகசியம் சொல்லி
ஏக்கம் கொள்ள வைக்கிறது
அன்பே உனது பெண்மை...
என்ன இரகசியமென்று
கைகளின் உரோமமும்
தலை தூக்கிப் பார்க்க...
அடுத்து என்னவென்ற
ஏக்கத்தில் மூளை
வழக்கத்தை விட
இன்னும் சுறுசுறுப்பாக...
முதன் முறையாய்
தெரிந்து கொண்டேன்
உரசிடாமலே பற்றிடும்
நெருப்புக் குச்சிகளை
நமது நிலையில்...
எரியும் தீயில்
நீருற்றி அணைக்காமல்,
கண்டும் காணாதவளாக
நடத்தியதை ஏதும்
தெரியாத விசமியாய்
எப்பொழுதும் போல
நிலையாகிறாய்....
என் ஆண்மை
ஏங்கித் தவிக்கின்றதடி
சில நிமிடங்களில்,
ஆண்மையாய் உருமாறிய
உனது பெண்மையில்...
No comments:
Post a Comment