இரண்டடி தூரத்தில்
மேகத்தின் சாரல்
உன் தலை துவட்டலில்..
Wednesday, 11 January 2012
வானவில்
வானவில்லின் வண்ணத்தில்
உடை பற்றி கேட்டுள்ளேன்..
அந்த வானவில்லே
உடையணிந்து வருவதை
இப்பொழுது தாணடி
காண்கிறேன் உன்னில்...
உடை பற்றி கேட்டுள்ளேன்..
அந்த வானவில்லே
உடையணிந்து வருவதை
இப்பொழுது தாணடி
காண்கிறேன் உன்னில்...
பூக்களை கடிக்காதீர்
ஏன் அடிக்கடி
என் உதடுகளையே கடிக்கிறாய்
எனச் செல்லமாய் கோபித்தபடி
கேட்கிறாள் என் கார்தலி.
பூக்களைப் பறிக்காதீர்
என்று தான் சொல்கிறார்கள்..
யாரும் கடிக்காதீர்
என்று கூறவில்லையே
என்றவாரே கடிக்க ஆரம்பித்தேன்.
என் உதடுகளையே கடிக்கிறாய்
எனச் செல்லமாய் கோபித்தபடி
கேட்கிறாள் என் கார்தலி.
பூக்களைப் பறிக்காதீர்
என்று தான் சொல்கிறார்கள்..
யாரும் கடிக்காதீர்
என்று கூறவில்லையே
என்றவாரே கடிக்க ஆரம்பித்தேன்.
உனக்காய் காத்திருக்கையில்...
நொடிக்கொரு முறை
நொடிமுள் நகர்கிறதோ இல்லையோ,
கடிகாரம் பார்த்துவிடுகிறது
என் கண்கள்
உனக்காய் காத்திருக்கையில்...
நொடிமுள் நகர்கிறதோ இல்லையோ,
கடிகாரம் பார்த்துவிடுகிறது
என் கண்கள்
உனக்காய் காத்திருக்கையில்...
நீயும் நானும் காதலில்
காதல் தேவதையால்
நீ காப்பாற்றப்பட்டவள்.
நானோ இரட்சிக்கப்பட்டவன்.
நீ காதலில் விழவில்லை.
நானோ விழுந்து எழவில்லை.
நீ காப்பாற்றப்பட்டவள்.
நானோ இரட்சிக்கப்பட்டவன்.
நீ காதலில் விழவில்லை.
நானோ விழுந்து எழவில்லை.
Tuesday, 3 January 2012
தோல்வி
வெற்றியைக் காட்டிலும்
தோல்வியிலே தான்
மறக்கப்பட்டிடாமல்,
வாழ்ந்து கொண்டிருக்கிறது
பெரும்பாலான காதல்...
தோல்வியிலே தான்
மறக்கப்பட்டிடாமல்,
வாழ்ந்து கொண்டிருக்கிறது
பெரும்பாலான காதல்...
ஞாபகசக்தி
வயதானால்
எந்த வயது வரை
வாழ விருப்பம் என்ற கேள்விக்கு,
அவளுடனான நினைவுகளின்
ஞாபக சக்தி
தீரும் மட்டிலும் என்றேன்...
எந்த வயது வரை
வாழ விருப்பம் என்ற கேள்விக்கு,
அவளுடனான நினைவுகளின்
ஞாபக சக்தி
தீரும் மட்டிலும் என்றேன்...
என் நினைவு
திருமண விழாவொன்றில்
உன்னைப் பார்த்ததும்,
என் நினைவு வந்ததாய்
கூறினாள் என் தோழி...
உன்னைப் பார்த்ததும்
யார் யாருக்கோ
என் நினைவு வருகையில்,
உனக்கு வரவில்லையாடி
தினம் தினம்
உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்க்கையில்...
உன்னைப் பார்த்ததும்,
என் நினைவு வந்ததாய்
கூறினாள் என் தோழி...
உன்னைப் பார்த்ததும்
யார் யாருக்கோ
என் நினைவு வருகையில்,
உனக்கு வரவில்லையாடி
தினம் தினம்
உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்க்கையில்...
காதலி எனக்கு
பத்தொன்பது வருடம்
வாழ்க்கை சுமந்த கருவிலிருந்து
உன் காதலில் புதிதாய்
பிறந்த எனக்கு - இன்று
ஒன்பதாவது பிறந்தநாள்
இரண்டாவது நினைவஞ்சலி...
வாழ்க்கை சுமந்த கருவிலிருந்து
உன் காதலில் புதிதாய்
பிறந்த எனக்கு - இன்று
ஒன்பதாவது பிறந்தநாள்
இரண்டாவது நினைவஞ்சலி...
வேண்டுதல்
யாரோ ஒருவரது
வேண்டுதல் கூட
நம்மை வாழவைக்குமாமடி.
நானும் வேண்டிக்
கொள்கிறேனடி,
எனக்கென
நீ இல்லாத பொழுதும்
உனக்காக...
வேண்டுதல் கூட
நம்மை வாழவைக்குமாமடி.
நானும் வேண்டிக்
கொள்கிறேனடி,
எனக்கென
நீ இல்லாத பொழுதும்
உனக்காக...
கண்ணீரில் வாசல் தெளித்த விடியல்
உன் நினைவிற்குள்
பயணிக்கத் தொடங்கும்
பெரும்பாலான எனது
இரவுகளுக்கான பரிசாய்,
கண்ணீரில் வாசல் தெளித்த
விடியலாய் தானிருக்கும்...
பயணிக்கத் தொடங்கும்
பெரும்பாலான எனது
இரவுகளுக்கான பரிசாய்,
கண்ணீரில் வாசல் தெளித்த
விடியலாய் தானிருக்கும்...
மண் பார்த்து கவிழ்ந்திருந்தால்
போகும் பாதையில்
வானம் பார்த்து மலர்ந்த ரோஜா,
மண் பார்த்து கவிழ்ந்திருந்தால்,
நிச்சயம் அவள் கடந்திருப்பாள்
பறித்துச் சூடிடாமல்..
வானம் பார்த்து மலர்ந்த ரோஜா,
மண் பார்த்து கவிழ்ந்திருந்தால்,
நிச்சயம் அவள் கடந்திருப்பாள்
பறித்துச் சூடிடாமல்..
மண் வாசனை
மழை பெய்திடும்
இடத்தினில் முன்னே
வீசிடும் மண்வாசனை,
நீ என்னைக் கடக்கையிலும்
வீசிக் கொண்டிருக்கிறது...
இடத்தினில் முன்னே
வீசிடும் மண்வாசனை,
நீ என்னைக் கடக்கையிலும்
வீசிக் கொண்டிருக்கிறது...
உதிர்த்திடாத இலைகள்
இலையுதிர் காலத்திலும்
உதிர்த்திடாத தன் இலைகளை,
இப்பொழுது மட்டும்
உதிர்க்கிறது - உன்
வருகை பொருட்டு..
உதிர்த்திடாத தன் இலைகளை,
இப்பொழுது மட்டும்
உதிர்க்கிறது - உன்
வருகை பொருட்டு..
தாயினை எப்படியடி மறக்க.
என் முதல் காதலை
இன்னுமா மறக்கவில்லை என
கேட்டேவிட்டாள் என் மனைவி..
உயிரோடு என்னைப்
படைத்தவள் தாயென்றால்,
இப்படி உனக்கு உருப்படியாக
எனை மாற்றித் தந்தவளும்
தாய் தானே...
தாயினை எப்படியடி மறக்க.
இன்னுமா மறக்கவில்லை என
கேட்டேவிட்டாள் என் மனைவி..
உயிரோடு என்னைப்
படைத்தவள் தாயென்றால்,
இப்படி உனக்கு உருப்படியாக
எனை மாற்றித் தந்தவளும்
தாய் தானே...
தாயினை எப்படியடி மறக்க.
வார்த்தைகளும் சோர்ந்ததால் விட்டுவிட்டேனடி
என்னை நினைக்கும் பொழுதெல்லாம்
கவிதை எழுதுவாயே,
ஏன் இப்பொழுதெல்லாம்
எழுதவில்லை. - என்னை
நினைப்பதே இல்லையா
எனக் கேட்டாள் காதலி..
மூவெட்டு மணியும்
உன்னைப் பற்றியே
கவிதை எழுத
வார்த்தைகளும் சோர்ந்ததால்
விட்டுவிட்டேனடி என்றேன்..
கவிதை எழுதுவாயே,
ஏன் இப்பொழுதெல்லாம்
எழுதவில்லை. - என்னை
நினைப்பதே இல்லையா
எனக் கேட்டாள் காதலி..
மூவெட்டு மணியும்
உன்னைப் பற்றியே
கவிதை எழுத
வார்த்தைகளும் சோர்ந்ததால்
விட்டுவிட்டேனடி என்றேன்..
விதி
ஒன்றை இழக்க வைத்து தான்
இன்னொன்றை
பெற்றுத் தந்திடுமாம் விதி.
இப்படி கவிஞாக்கிடத் தான்
உன்னை இழக்க
வைத்திட்டதோ...
இன்னொன்றை
பெற்றுத் தந்திடுமாம் விதி.
இப்படி கவிஞாக்கிடத் தான்
உன்னை இழக்க
வைத்திட்டதோ...
எனக்குப் பிடித்த காதல் நீ????
காதலிக்கும் பொழுது
உனக்குப் பிடித்த
கவிதை
எழுத சொல்லிடுவாள்.
எதும் தோன்றிடாது எனக்கு.
இன்று உனக்கு
பிடித்த கவிதை எழுதிருக்க
எனக்குப் பிடித்த
காதல் நீ????
உனக்குப் பிடித்த
கவிதை
எழுத சொல்லிடுவாள்.
எதும் தோன்றிடாது எனக்கு.
இன்று உனக்கு
பிடித்த கவிதை எழுதிருக்க
எனக்குப் பிடித்த
காதல் நீ????
நினைவுப் பறவைகள்
விடிந்ததும் கலைந்து
இரவில் கூட்டில் அடையும்
பறவைகளாய்,
பகல் வேளையில் கலைந்து
இரவினில் படுத்ததும்
சரியாய் என்னுள்
அடைந்து விடுகிறது
உன் நினைவுப் பறவைகள்.
இரவில் கூட்டில் அடையும்
பறவைகளாய்,
பகல் வேளையில் கலைந்து
இரவினில் படுத்ததும்
சரியாய் என்னுள்
அடைந்து விடுகிறது
உன் நினைவுப் பறவைகள்.
Subscribe to:
Posts (Atom)