Thursday, 31 March 2011

அழகிப் போட்டி

நீ இங்கு இருக்க
நீயின்றி எப்படியடி
அழகிப் போட்டி...
ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு அழகியாம்..
என்னடி இது..
ஒரு முறை
நீ கலந்து கொள்ளடி
வழக்கொழிந்து போகட்டும்...
உனக்குப் பின்
நம் வாரிசுக்கு என
நம் பரம்பரை
பட்டமாகிப் போகட்டும்...

நினைவுகள்

முன்னோக்கி செல்லும்
வாழ்க்கையில்
பின்னோக்கி போகும்
காட்சியாய்,
உன் நினைவுகள்
காலப் பேருந்தில்...