Monday 24 October, 2011

இரசிகர் யாரேனும் கூறுங்களேன்..

எங்கேயடி அவள்.
என்னோடு நிழலாய் மடியோடு.
மழலையாய் காதலோடு
வாழ்ந்த அவள் எங்கே.

வாழ்க்கையின்
பெரும்பாலான தேடல்கள்
அவளை கண்டிடவே...

ஓரிடம் விழுந்த பொருளை
ஓரிடம் தேடலாம்.
என்னைப் போல் அல்லாடி
உலவிக்கொண்டிருக்கும்
அவளை எப்படி தேட...

தூரத்தில் திருமண
ஊர்வலத்தின் நாயகியோ.

எனக்கடுத்த திருப்பத்தில்
வளைந்தவள் பெண்ணொருத்தியோ..

முன்னோக்கி செல்லும் பேருந்தில்
என் நினைவுப் பாரம் தாளாமல்
கணவன் தோள் சாய்ந்தவளோ..

நான் கொட்டிச் சென்ற விபுதியில்
நெற்றி நனைத்தவளோ..

அவள் வரும் பாதையில்
நான் காத்திருக்கும் நேரம்
நான் வரும் வழியில்
எனக்காய் காத்திருப்பாளோ..

ஒரு திசையில் இரசிக்கும்
வானவில்லின் மறுபக்கம்
அவள் ரசித்திருப்பாளோ..

கூட்டத்தின் நெரிசலினூடே
என் மூச்சோடு தன் மூச்சு
கலந்திருப்பாளோ...

பிடித்த திரைப்படம் பார்க்கையில்
என்னைப் போல் கண்ணீரில்
காதல் நினைவுகள் அமிழ்த்திருப்பளோ..

எனக்குப் பிடித்த
ஊதா நிறச் சட்டையினை
எடுத்தபின் வெருப்பில்
புறம் தள்ளியிருப்பாளோ...

நமக்கு பிடித்த பாடலை
அவள் குரலில் கேட்கும்
என்னைப் பொல்
அவளும் என் குரலில் கேட்டிருப்ப
ளோ..

யார் பதில் சொல்வது..
திரைப்பட காட்சியினைப் போல்
பார்த்த இரசிகர் யாரேனும்
கூறுங்களேன்..

No comments:

Post a Comment