Wednesday 27 July, 2011

ஊமையின் காதல்

இன்றேனும்
உனது மௌனம்
கலையாதாவென ஏக்கம்...

வானவில்லாய் வியாப்பித்து
குதுகலம் செய்த பின்,
நிரந்தரமில்லை என
களைந்து போகும்
நியாயம் என்னடி...

தட்டுத் தடுமாறும் குழந்தையாய்
உன்னைத் தொடருகையில்,
விலகி ஓடிடும்
அவலம் ஏனடி...

உன்னைச் சுற்றியே
ஒளிபரப்பாகும்
என் நிலைவலைகள்
உனது அலைவரிசையில் மட்டும்
புலப்படவில்லையோ...

கண்ணீரின் மதிப்பு
பெண்களுக்கு காரியம்
முடியும் மட்டும்...
ஆணுக்கோ அவனது
கடைசி காரியமும்
முடியும் மட்டும்...

ஒருபோதும்
புரிவதில்லை உண்மைக் காதல்..
தொட்டிலில் உன்னை
தாலாட்ட எண்ணும்
என் மனம் தவிர்த்து,
உன்னை தொட்டில் கட்ட
வைப்பவனிடம் தானே
போகிறது உன் மனம்...

அடிப் போடி
ஊமையின் காதல்
எங்கே புரியப் போகிறது
செவிடாகிப் போன
உன் மனதிற்கு...

1 comment:

  1. ஊமையின் காதலெங்கே
    புரியப்போகிறது
    செவிடாகிப்போன உன் மனதிற்கு...
    இதைவிட மறுக்கப்படும் காதலைச் சொல்ல
    தமிழில் வேறு வார்த்தைகள் இருக்கிறதா என்ன.
    அருமை அருமை.

    ReplyDelete