Monday 27 December, 2010

காதல் சொல்ல

அன்றொரு அழகிய மழைக்காலம்..
கல்லூரி நேரம் முடிந்ததை
அறிவிக்க அடித்த மணி...

எங்கள் காதல் மழைக்கான
அறிகுறி இடியும்
அதுதான் போலும்...

இத்தனை நாள்
வார்த்தை பரிமாற்றங்கள் இல்லாமல்
கண்களாலே குறுஞ்செய்தி அனுப்பிய
எங்கள் காதலுக்கு கோடை மழை...

மழைச் சாரலில்
நான் ஓரமாய் ஒதுங்க
என் நிழலென
அவளும் என்னருகில் பதுங்க...

சேய் காக்கும் தாயென
விழி காக்கும் இமையாய்
என் பின்னால் வைத்தேன் அவளை
நானும் மாறினேன்
மழை தடுக்கும் தடுப்பாய்...

அவளோ என்னை நனைத்தால்
காதல் பார்வை சாரலில்...
அவள் என் பின்னால் பதுங்கிய நொடியில்
என் இதயம் முதுகுப் பகுதியில்
துடிக்கக் கேட்டேன்...

புத்தகம் கொடுக்கும் சாக்கினில்
என் இதயக் கடிதத்தையும்
கொடுத்தேன் அவளிடம்...

வாங்க மறுக்கும் பட்சத்தில்
செத்து விடும் சாக்கினில்
என்னை விட்டு வெளியேறிய என்னிதயம்
வெட்கப்புன்னகை பூத்து
அவள் வாங்கிய அந்த நொடியில்,
இதயம் மழையில் குதுகளிக்கின்றது...

சம்மதமா என்று நான் தலையாட்ட
என் கரம் கிள்ளி
சரி என்று சொன்ன நொடி
உயிர் ரெண்டும் வெளியேறி
மழையில் ஆடியது கை கோர்த்து...

இப்பொழுது மழை பெய்ந்து ஓய்ந்தாலும்
அந்த நாளின் பசுமை மட்டும்
காய மறுக்கின்றது
எங்கள் காதல் நினைவுச் சாரலில்....

No comments:

Post a Comment