Thursday 7 October, 2010

துடித்துக் கொண்டே தானிருக்கும்..

கல்லூரித் தோட்டத்தில் பூப்பறிக்கும்
என் நினைவலைகளில் கல்லெறிந்தாய்
பூவைச் சுற்றும் வண்டு என
உன்னைச் சுற்றும் என்னை அறிந்தாய்...

வீசும் பார்வைக் கத்தியிலே - என்
இதயப் பூவை வெட்டிச் சாய்த்தாய்
இதுவென்ன மாயமோ
இதுதான் காதலோ...

கால் கடுக்கும் நேரத்திலும்
கால் நொடிப் பொழுதுகளிலும்
கண் காணா காட்சியென
கண்ணே உன்னைக் கண்டிருந்தேன்...

கண்ணென நீயும் இமையென நானும்
கனவாகக் கண்டதாலோ
கண் காணா இமையென
என்னைப் பாராமல் நாட்கழித்தாய்....

என் காதல் தெரிந்தும் நடிக்கிறாயா
இல்லை தெரியாமல் இருக்கிறாயா - என்
கண்கள் ரெண்டும் மூடும் முன்னே
கனவிலாவது சொல்லிவிடு....

உடல் மண் மூடி மறைத்தாலும்
மறையாது உன் நினைவு
மறைந்தாலும் கவலையில்லை
மறக்காது சொல்லிவிடு உன் காதலை...

நீ வாழும் இடமென்று
உனக்கென துடித்த இதயம்
உன் வருகைக்காக - அப்போதும்
துடித்துக் கொண்டே தானிருக்கும்....

1 comment: