Thursday 7 October, 2010

முத்தத்தின் ஈரம்

வெம்மை மங்கிடும் மாலையில்
கொட்டும் மழையின் சாரலில்
உடல்கள் குளிரில் கிடுகிடுக்கையில்
காதலை நீங்காமல் பதித்திட்ட நாள்...

உன்னை முத்தமிட நெருங்கிட
வார்த்தைகள் வேண்டாம் என்றிட
கண்கள் வா வாவென்று அழைத்தது...

உன் அருகாமையில்
என் உடலெங்கும் புதுச் சூடு பற்றிட,
மூச்சில் பட்ட வெப்பக் காற்று
உண்டாக்கியது புதுவித ஏக்கம்...

உன் மூச்சும் என் மூச்சும்
ஒன்றாக் கலந்திட,
நம்மைச் சுற்றி உள்ள சுவர்களும்
வெட்கப்பட்டு முகத்தை திருப்பிக் கொண்டன...

உன் இதழ்கள் நான் பற்றிட
உன் கண்களை காதல் பற்றிட
மூடிக்கொண்டாய் உன் கண்களை
பற்றிக் கொண்டே இறுக்க என்னை...

உன் உதட்டோடு உறவாடி
என் உயிரோடு கலந்தாயடி
உதட்டில் பதித்த முத்தத்திலே
நம் காதல் தெரிந்தது தித்திப்பிலே
உதட்டோடு உமிழ்நீர் வழியே
பரிமாறிக் கொண்டோம் நம் காதலை...

உன் காதலை உன் அணைப்பிலும்
என் காதலை என் இறுக்கத்திலும்
வார்த்தையின்றி உணர்த்தி உணர்ந்தோம்..

அந்த உன்னதமான வேளையில்
வார்த்தைகள் பேச வழியும் இன்றி
இதழ்களில் நடந்தது யுத்தமொன்று...

காதலை உணர்ந்த நம் கண்ணில்
அழுகை இன்றி கண்ணீர் ஊற்று
துடைக்க எடுத்த கையை
பார்வையாலே தடை போட்டு...

என் கண்ணிமையோடு
உன் இதழ் இமைகள் முத்தமிட
இதழில் தொற்றிக் கொண்டது
கண்ணீர்த்துளி பன்னீர்த் துளியாய்...

கண்ணீர்த் துளியும் தித்தித்தது
சேருமிடத்தில் சேர்ந்திடுகையில்.

அந்த முத்தத்தின் ஈரம் காய்ந்திருக்கலாம்
உதட்டில் பதித்த அழுத்தமும் இளகிருக்கலாம்
நம் உயிரில் கலந்த காதல்
காற்றரியா முகவரியை போனதெங்கே...

1 comment: